நடிகை விஜயசாந்தி பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்
நடிகை விஜயசாந்தி பா.ஜ.க. தேசிய செயற்குழு பொறுப்பு வகித்து வந்தார். அவர் பா.ஜ.க.வில் இருந்து நேற்று முன்தினம் விலகினார். தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 2 வாரங்கள் உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு பெரிய அடியாக இது கருதப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்காமல் இருந்த விஜயசாந்தி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் ஜி.கிஷன் ரெட்டிக்கு அனுப்பினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகிய நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே முன்னிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார். தெலுங்கானாவில் ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் இவர்.