நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து சர்ச்சையானது. இந்த சர்ச்சை முடிந்து சுமுகமாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்றார்.
அங்கு பீட்டர் பால் மது அருந்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சென்னை திரும்பிய பிறகும் பீட்டர் பால் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட வனிதா, பீட்டர் பால் ரொம்ப குடிக்கிறார், நம்பி ஏமாந்துவிட்டேன். தற்போது என்னால் சிரிக்கக் கூட முடியவில்லை. அவர் வீட்டிற்கும் வருவது இல்லை, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிழைத்த மனிதர் இப்படி மது அருந்துவதும், புகைப்பிடிப்பதுமாக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த ஒருவர், வனிதாவின் வீடியோ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கஸ்தூரியிடம் கேட்டார். அதற்கு கஸ்தூரியோ, வீடியோ வேறையா? பார்த்துட்டு சொல்றேன். என் அனுபவத்தில் இது சொல்வதெல்லாம் பொய் ரகம் என்றார்.
வீடியோ பார்த்த கஸ்தூரி, ஓமைகாட், நான் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்தேன். அருமையாக எடிட் செய்து, ஸ்டைலான கார்டு எல்லாம் இருந்தது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ, புரியலடா சாமி. எல்லாம் பொய், தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க, வனிதா மட்டும் தான் பாதிக்கப்பட்டவர். அது எல்லாம் எதிர்பார்த்தது தான். ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் புகார் தெரிவிக்கணும்? நம்ப முடியவில்லை.
வீடியோவில் நாலு விளம்பர இடைவேளை வேறு. ஸ்க்ரிப்ட் எடிட் செய்யப்பட்டு, நன்றாக பெர்ஃபார்ம் செய்யப்பட்ட இந்த வீடியோ மூலம் நிறைய சம்பாதிப்பார். பீட்டர் பாலின் மருத்துவ செலவுக்கான பணத்தை சம்பாதிக்க பார்க்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.