நடிகை ராஷ்மிகா சர்ச்சை பேச்சு – கன்னட அமைப்புகள் கண்டனம்

நடிகை ராஷ்மிகா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலம் ஆனார். கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது டியர் காம்ரேட் என்ற தெலுங்கு படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடத்திலும் டப்பிங் ஆகி நேற்று ரிலீசானது. இந்த நிலையில் எந்த மொழியில் நடிப்பது கஷ்டம் என ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா கன்னடத்தில் பேசி நடிப்பதுதான் கஷ்டம் என்று கூறிவிட்டார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர். இந்நிலையில் கன்னடம் தனக்கு கஷ்டம் என்று அவர் கூறியதை கேட்ட கன்னட அமைப்புகள் ராஷ்மிகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா கன்னடம் பேசுவது கஷ்டம் எனக் கூறுவதா? மற்ற மொழிகளில் பிரபலம் அடைய தனது மொழியை புறம் தள்ளுவதா என்று கொந்தளித்துள்ளனர். இதனால் கடுப்பான கன்னடர்கள் டுவிட்டரில் பாய்காட் டியர் காம்ரேட் என்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ராஷ்மிகாவுக்கும் அவரது படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools