X

நடிகை ராதா மீது மீண்டும் போலீசில் புகார்

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முரளி என்பவரை தாக்கியதாக, சுந்திரா டிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராதா மீதான புகார் தொடர்பாக சென்னை வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீதும் அவர் மகன் தருண் மீதும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.