Tamilசினிமா

நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்

விஜய் நடித்த ’தமிழன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பின்னர் அவர் தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து நம்பர் ஒன் நடிகை ஆனார். தற்போது அவர் ஹாலிவுட் மற்றும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நீச்சலுடையில் படுத்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் மீது அவரது கணவர் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது போன்ற புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஸ்நாக்ஸ் சாப்பிடும் இடமா அது? என்று பிரியங்கா சோப்ரா கணவரை கலாய்த்து வருகிறார்கள். இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.