நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி சுபாஷ் சந்திர போஸ் ரூ.9 லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடி காரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ.2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தான் பார்வதி நாயர் தனது புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் தருவதாகவும் கொடுத்த புகாரின் பேரில் தற்போது நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுபாஷ் சந்திர போஸ், நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தனக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.