Tamilசினிமா

நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ! – பாராட்டும் ரசிகர்கள்

தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது அவர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஒரு இந்தி படத்தின் பாடலை கித்தாரை இசைத்தபடி பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் நிவேதாவின் திறமையை புகழ்ந்து வருகிறார்கள்.