நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பர் திரிஷா. இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் அறிவியல், அறிவு மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள சிறப்புத் திறமையாளர்கள் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். கோல்டன் விசா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும்.

கோல்டன் விசா பெற்ற திரிஷா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டான் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ எனப் பதிவிட்டுள்ளார்.

ஷாருக் கான், போனி கபூர், அர்ஜூன் கபூர், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் போன் சினிமா நட்டசத்திரங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின்  கோல்டன் விசாவை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools