நடிகை திரிஷாக்கு ஆதரவு நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சமீப காலமாக சினிமா நடிகைகளை பொதுவெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது. வாய், நாக்கு இருப்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவதா? பார்க்காத விஷயத்தை பார்த்தமாதிரி எப்படி பேசலாம். ஏ.வி.ராஜுவுக்கு கட்சிக்குள் பிரச்சினை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசுவதா?அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், “கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்” என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, “கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான், இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.