Tamilசினிமா

நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இதைத் தொடர்ந்து இவர் காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஷாருக் கான் நடித்து வெளியான டங்கி படத்திலும் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது நீண்டகால நண்பரும், பேட்மின்டன் வீரருமான மத்யாஸ் போ என்பவரை டாப்சி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

இருவரின் திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும், இதில் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரின் திருணம் சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.