Tamilசினிமா

நடிகை கீர்த்தி சுரேஷ் – நடிகர் சூரி மாறி மாறி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டனர்

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் ‘தசரா’. இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி ரூ.38 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.

இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சூரி சமூக வலைத்தில் பதிவிட்டிருந்தார். அதில், என் அன்பு தங்கச்சி கீர்த்தி சுரேஷ், நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. விடுதலை படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும், தசரா படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தும் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்.

அதில், மிக்க நன்றி அண்ணா! என் அன்பு அண்ணனின் விடுதலை திரைப்படம் பெறும் வெற்றிபெற உங்கள் அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மாறி மாறி தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சூரி-கீர்த்தி சுரேஷின் பதிவுகளுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.