‘ஜெமினி’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். அதனை தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் வாடி எம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வியக்க வைக்கிறார். அந்த வகையில் அன்பே சிவம் படத்தில் கமலுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை பதிவு செய்து இருந்தார். அடுத்ததாக கோவா சென்று பாரில் இருந்த கிரண் அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.
தற்போது மும்பை சென்று பிரபலமான ஆலிவர் பாரில் இருந்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் ரசிகர்கள் பாரில் காலத்தை கழித்து வருகிறார் என பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.