நடிகை காஜல் அகர்வாலின் நம்பிக்கை

‘பழனி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தற்போது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராகத் திகழ்பவர். இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள ’கோமாளி’ படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

அவர் அளித்த பேட்டியில் தொடர்ந்து டப்பிங் குரல் பயன்படுத்துவது பற்றி கேட்டபோது, “டப்பிங் ஒரு சாதகம் என்பதை மறுப்பதற்கில்லை. விரைவில் நானே என் குரலில் டப்பிங் செய்வேன். மொழி தெரியாமல் இருப்பது பின்னடைவு தான். பேசவராது. நம்பிக்கை குறைவு என்று எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே என்னால் மொழிகளை எளிதில் கற்க முடியாது. இந்தியும் சுமாராகவே பேசுவேன். தெலுங்கில் முயற்சி செய்துள்ளேன். ஆனால், அது ஒத்துவரவில்லை என மாற்றிவிட்டார்கள்” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools