X

நடிகை கடத்தல் வழக்கு – நடிகை மஞ்சு வாரியரிடம் பல மணி நேரம் விசாரணை

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில்
அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலையான திலீப், வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது.

மேலும் வழக்கின் சாட்சியங்களை அழித்ததாகவும், குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சில கருத்துக்களை நடிகை மஞ்சுவாரியர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நடிகை மஞ்சுவாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3½ மணிநேரம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்களை நடிகை மஞ்சுவாரியர் தெரிவித்தார்.

அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர். மஞ்சுவாரியர் அளித்துள்ள தகவல்கள் மூலம் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படும் என்று தெரிகிறது.