X

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது துல்கர் சல்மான்  நடிப்பில் உருவாகி வரும் கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழில் பல்வேறு படங்களில் நடிக்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.

Tags: tamil cinema