X

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கையில் அறுவை சிகிச்சை

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார். அப்போது அவர் கையில் அடிபட்டு கட்டுப்போட்டு இருந்தார். அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் பதறினார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சுஎன்று தவிப்போடு கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக வேண்டியும் பதிவுகள் வெளியிட்டனர்.

ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. கட்டுப்போட்ட கையுடனேயே வித்தியாசமான உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார். தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்சில் இருந்து மும்பை திரும்பி உள்ளார். அடுத்த சில தினங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.