நடிகை அஞ்சலியின் 50வது படம் ‘ஈகை’ பர்ஸ்ட் லுக் வெளியானது

ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பின்னர் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஈகை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தை அசோக் வேலாயுதம் இயக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools