நடிகர் தனுஷ் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப், அந்த்ராங்கி ரே ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் ஹாலிவுட் படத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் இந்தி நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் தனுஷ், இந்தி நடிகர் சயீப் அலிகான் மகளும் இந்தி நடிகையுமான சாரா அலிகான் ஆகியோரும் பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சியில் தனுசுடன் சாரா அலிகான் நெருக்கம் காட்டினார். தனுஷ் கையை விடாமல் அவர் பிடித்துக் கொண்டார். தனுசுடன் கைகோர்த்தபடி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்.
இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. தனுசும் சாரா அலிகானும் அந்த்ராங்கி ரே படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். இருவரும் நட்பாகவே பழகுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இருந்தும் ரசிகர்கள் பலர் இவர்களின் நெருக்கத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதோ என்று முணுமுணுத்து வருகின்றனர். தனுஷ் தமிழில் நடித்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.