X

நடிகையிடம் அத்து மீறிய ரசிகர் – விமானநிலையத்தில் பரபரப்பு

கேதார்நாத் படம் மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாரா அலி கான். இந்தி நடிகர் சயீப் அலி கானின் மகளான இவர், முதல் படத்திலேயே பிலிம் பேர் விருதினை பெற்றவர். நிறைய படங்களில் நடித்து வருகிறார். விடுமுறைக் காக அமெரிக்கா சென்றிருந்த சாரா, சமீபத்தில் மும்பை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவருடன் ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க முயற்சித்தனர். சாராவும் புன்னகையுடன் ரசிகர்களுக்கு பொறுமையாக நின்று போஸ் கொடுத்தார்.

அப்போது ஒரு ரசிகர் அத்துமீறி சாராவின் மேல் கை போட்டு செல்பி எடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாரா, உடனே விலகிவிட்டார். அந்த ரசிகரிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் தள்ளி நின்று அவருக்கும் சிரித்த முகத்துடனேயே போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகையிடம் அத்துமீறிய அந்த ரசிகரை கடுமையாக திட்டியுள்ளனர். அதே நேரம் அவரிடம் கோபத்தை வெளிக் காட்டாமல் பொறுமையாக நடந்து கொண்ட சாராவை பாராட்டியுள்ளனர்.