1990-ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்ரம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த விக்ரம், இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான உல்லாசம் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் தடம் பதித்தார். இதனை தொடர்ந்து பாலா இயக்கிய சேது படத்தில் இவரின் நடிப்பு மூலம் தமிழ் திரையுலகினரை திரும்பி பார்க்க செய்தார்.
தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பண்முகத்தன்மை கொண்டவர். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விக்ரம், இந்திய கிரிக்கெட் வீரர் டோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, “நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை மகி” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.