X

நடிகர் மனோபாலா மறைவு – அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்டவரான மனோபாலா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் மனோபாலா மறைவை அறிந்து நேரில் வந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.