X

நடிகர் மகேஷ் பாபுக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி

வேதாளம் படத்தின் ரீமேக் தெலுங்கில் படமாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவியும் அவரது தங்கை கேரக்டரான லட்சுமி மேனன் கேரக்டரில் கீர்த்தி சுரேஷூம் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் அண்ணன் தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் மகேஷ்பாபுவும் அவருக்கு தங்கையாக நடிக்க பிரபல நடிகை சாய் பல்லவியும் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலில் இந்த படத்தில் நடிக்க சாய்பல்லவி தயங்கியதாகவும் பின்னர், இயக்குனர் திரிவிக்ரம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.