X

நடிகர் பிரபாஸுக்கு வெளிநாட்டில் அறுவை சிகிச்சை – ரசிகர்கள் பிரார்த்தனை

 

‘பாகுபலி’ படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் ‘சலார்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பிரபாஸ், அடிபட்டு காயம் அடைந்தார். உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

பிரபாஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அடி பலமாக இருப்பதால் ‘ஆபரேஷன்’ செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள். ஓய்வு எடுக்க முடியாத அளவுக்கு கைவசம் படங்கள் இருந்ததால், பிரபாஸ் அப்போது ‘ஆபரேஷன்’ செய்து கொள்ளவில்லை. அடிபட்ட இடத்தில் நேற்று வலி அதிகமானது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்துகொண்டார். டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் வெளிநாடு சென்று ‘ஆபரேஷன்’ செய்துகொள்ள முடிவு செய்தார்.அதன்படி பிரபாஸ் நேற்று முன் தினம் ஸ்பெயின் நாட்டுக்கு விமானம் மூலம் சென்றார். அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது. இதனை ரசிகர்கள் வருத்தத்தில் பதிவிட்டு வருகின்றனர்.