நடிகர் பாபி சிம்ஹாவிடம் ரூ.1.70 கோடி ஏமாற்றும் என்ஜினியர்

கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலை அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்ற காண்ட்ராக்டருடன் ஒப்பந்தம் செய்தார்.

ஜமீரின் உறவினரான காதர் இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பரிந்துரை செய்துள்ளார். பாபிசிம்ஹாவும், காதரும் நண்பர்கள் என்பதால் அதனடிப்படையில் வீடு கட்டி கொடுக்க இருவரும் சம்மதித்தனர். கட்டுமான பணிகள் செய்வதற்காக பாபிசிம்ஹாவிடம் ஜமீர் ரூ.1. கோடியே 70 லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டை கட்டி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

பணிகள் பாதியில் நிற்கவே இதுகுறித்து ஜமீரிடம் கேட்டபோது கூடுதலாக பணம் கொடுத்தால் தான் வீட்டை கட்டி முடிக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தி சென்றதால் பாபிசிம்ஹா அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து ஜமீர், உசேன், பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் மீது பாபிசிம்ஹா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே பாபிசிம்ஹா மற்றும் கே.ஜி.எப். பட வில்லன், நடிகர் ஆகியோர் ஜமீரை மிரட்டியதாக கொடைக்கானலில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாபி சிம்ஹா கொடைக்கானலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஜமீரின் மைத்துனரான காதர் எனது நண்பர். அவர் சொன்னதால் தான் ஜமீருக்கு வீடு கட்ட ஒப்பந்தம் செய்து கொடுத்தேன். ரூ.1.70 கோடி பணம் வாங்கி கொண்டு தரமற்ற கட்டிடப்பணிகளை செய்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema