நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா பாதிப்பு!
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், திரைத்துறையை சேர்ந்த பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 16ம் தேதியன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
முன்னெச்சரிக்கையாக இருந்த போதிலும் “சிபிஐ 5” படப்பிடிப்பில் இருந்த போது வைரஸ் தொற்று ஏற்பட்டதாக மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்ற துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் , “எனக்கு இப்போதுதான் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன்