நடிகர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கார்த்தி
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.
இந்நிலையில், தனுஷிற்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
50வது படத்திற்கு வாழ்த்துகள் தனுஷ். உங்களின் அயராத உழைப்புக்கும், சினிமா மீதான ஆர்வத்துக்கும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள். ராயன் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.