Tamilசினிமா

நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக வந்த பிரபல இந்தி நடிகர் சோனு சூட், கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

இந்நிலையில், நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் உள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் லக்னோவில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பாக நடிகர் சோனு சூட் களமிறக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன. இதை அடுத்து டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்திற்கும் ஆம் ஆத்மி கட்சி மூலம் சோனு சூட் தூதுவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.