X

நடிகர் சுதீப்பின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது – நடிகர் பிரகாஷ்ராஜ் கவலை

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் சமீபத்தில் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக தெரிவித்திருந்தார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. இதையடுத்து இன்று பாஜக கட்சியில் கிச்சா சுதீப் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.

இதைத்தொடர்ந்து, பெங்களூரில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப் வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவுள்ளதாகவும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கிச்சா சுதீப் பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக செய்தி அறிந்ததும் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கர்நாடகாவில் தோல்வி முகம் காண கூடிய மற்றும் நம்பிக்கையற்ற பா.ஜ.க.வால் பரப்பப்படும் போலியான செய்தியாக இது இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார். தற்போது இது உறுதியான நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சுதீப் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.