நடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள் – அமைச்சர்கள் மரியாதை

நடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அடையாரில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நடிகர் சிவாஜி பற்றி நாள்முழுவதும் பேசி கொண்டிருக்கலாம் என்றும், அவர் எந்த கதாபாத்திரம் ஆனாலும் முத்திரை பதித்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

இதேபோல் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் பிரபு மற்றும் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news