Tamilசினிமா

நடிகர் சிம்புக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

நடிகர் சிம்பு செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும், அளிக்கவில்லை எனில், அவர் மற்ற படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக 2021-ம் ஆண்டு “கொரோனா குமார்” என்ற படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ரூ. 9.5 கோடி சம்பளமாக பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதைத் தொடர்ந்து ரூ. 4.5 கோடி வரையிலான தொகையை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறது.

எனினும், “கொரோனா குமார்” படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரூ. 1 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. அதன்படி நடிகர் சிம்பு “கொரோனா குமார்” படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடித்து வருவதால், வேல்ஸ் நிறுவனம் நடிகர் சிம்புவுக்கு எதிராக மனுதாக்கல் செய்து இருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் தான், சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு ரூ. 1 கோடிக்கான உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.