நடிகர் சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட டக்கர் டிரைலர்
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், தற்போது நடித்துள்ள படம் ‘டக்கர்’. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார்.சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். இதில் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு டக்கர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் வருகிற மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.