நடிகர் சல்மான் கானை சந்தித்த நடன இயக்குநர் ஜானி

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இந்தியில் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வரவே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து சல்மான் கானை தற்காத்து கொள்ள அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சல்மானுடன் ஜானி மாஸ்டர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜானி மாஸ்டர் சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் பணிப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools