X

நடிகர் சங்க தேர்தல் – மைக் மோகனின் பெயரில் கள்ள ஓட்டுப் பதிவு

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது.

இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் வழங்குகின்றனர். தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்த மைக் மோகன் பெயரில் ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் மைக் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள வாக்கு பதிவானது என்ற தகவல் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.