Tamilசினிமா

நடிகர் சங்க தேர்தல் – கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். – ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கிறது.

இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் அணியும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். நேற்று நாசர் சங்கத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாசர்-விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிடுவதால் நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் களம் இறங்கி உள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், துணைத் தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினியும் போட்டியிடுகிறார்கள்.

பாக்யராஜ் அணி சார்பில் போட்டியிடுபவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். மேலும் தங்கள் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருப்பவர்கள் பலர் எங்கள் அணியில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை. ரஜினி, கமல் ஆகியோரிடம் ஆலோசித்த பின்னரே தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். எங்கள் அணியில் பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த் நிற்கிறார்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *