நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போட முடியாது – ரஜினிகாந்த் அறிவிப்பு
நடிகர் சங்கத் தேர்தல் ஏற்கனவே அறிவித்தப்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நாளை காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் நான் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியதாவது:
மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு எனக்கு தாமதமாக கிடைத்தது. தபால் வாக்கு படிவம் இன்று மாலை 6.45 மணிக்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தபால் வாக்கு படிவத்தை முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிலை வரும் காலங்களில் ஏற்படக்கூடாது. தாமதமாக தபால் வாக்கு கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.