நடிகர் சிலம்பரசன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது அரசியல் பின்னணி உள்ள கதை என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சிம்பு. அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீண்ட நாள்களாக இயற்கையின் செயல்களால் உங்களிடம் நேரடியாக உறவாடாமல். தொலைபேசி வழியாக உறவு கொண்டோம். மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவ அணி, தொழில்நுட்ப அணி, கலை இலக்கிய அணிகள் மூலம் மன்றத்தை விரிவுபடுத்த உள்ளோம்.
ஆகவே நம் மன்றத்தின் அகில இந்திய தலைவர் டி.வாசு தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆகாவே மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.