X

நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை (29-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ‘மாமன்னன்’ திரைப்படத்தை பார்த்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து உதயநிதி தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Tags: tamil cinema