Tamilசினிமா

நடிகர் ஆரவுக்கு ரேஸ் பைக் பரிசளித்த நடிகர் அஜித்குமார்

பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் ‘விடாமுயற்சி’ . இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கிறார். இப்படத்தை ‘லைகா’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது.

அஜித் குமார் அவர்களின் நண்பர்களோடு பைக் டூர் செல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் மீண்டும் நண்பர்களுடன் பைக் டிரிப் சென்றார். அதில் நடிகர் ஆரவும் உடனிருந்தார். அந்த டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

கடந்த வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித் குமாரும் ஆரவும் மிக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித் குமார் ஆரவுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிளான ரேசிங் பைக்கை பரிசளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.