Tamilசினிமா

நடிகர் அர்ஜுன் மீது பிரபல நடிகர் புகார்

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாகவும், தெலுங்கு இளம் நடிகர் விஷ்வக் சேனை நாயகனாகவும் வைத்து தெலுங்கு படத்தை இயக்க இருந்தார். இதனிடையே விஷ்வக் சேனுக்கு தொழில் பக்தி இல்லை என்று குற்றம் சாட்டி அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டார். அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்து விஷ்வக் சேன் கூறும்போது, ”என்மீது அர்ஜுன் சொன்ன குற்றச்சாட்டுகளை கேட்டதும் இமயமலை சென்று விடலாம் என்று தோன்றியது. அந்த படத்துக்கு நிறைய உழைப்பை கொடுக்க நினைத்தேன். ஆனால் எனக்கும், அர்ஜுனுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. எனக்கு கொடுத்த சம்பளத்தை திருப்பி கேட்டார்கள்.

கதை பற்றி நன்றாக விவாதித்து அதன்பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்றேன். எனது ஆலோசனைகளை அவர் கேட்கவில்லை. அதனால்தான் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. அர்ஜுனுக்கு மரியாதை கொடுத்தேன். நானாக படத்தில் இருந்து விலகவில்லை. அவர் நல்ல படம் எடுக்க வேண்டும். அர்ஜுன் என் மீது குற்றம் சுமத்தியதால் எனது குடும்பத்தினரும், நண்பர்களும் வருத்தப்படுகிறார்கள்” என்றார்.