அமீர்கானின் மகன் ஜுனைத் கான் ‘மகராஜ்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். யாஷ் ராஜ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியுள்ள இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு பஜ்ரங் தளம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜூன் 3 ஆம் தேதி படத்தின் தயாரிப்பாளர் யாஷ் ராஜ் மற்றும் ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் ஆகியவற்றிற்கு பஜ்ரங் தளம் கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், எனவே படத்தை ரிலீஸுக்கு முன்பு எங்களுக்கு காட்ட வேண்டும் என்று பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில், பஜ்ரங் தளத்தின் தலைவர் கவுதம் ரவ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பையில் உள்ள யாஷ் ராஜ் அலுவலகம் முன் பஜ்ரங் தள உறுப்பினர்களுடன் போராட்டம் நடத்திய வீடியோவை பகிர்ந்துள்ளார்.