பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன், கடந்த 1982ல் நடந்த ஒரு விபத்தின் போது, அமிதாப்புக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் ‘ஹெப்பாடிடீஸ் பி’ வைரஸ் இருந்துள்ளது. இந்த ரத்தம் அவருக்கு செலுத்தப்பட்டதன் விளைவாக, அவரது கல்லீரல் 75 சதவீதம் செயல் இழந்தது. அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் அவருக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது, தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என சுறுசுறுப்புடன் இயங்கி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று நள்ளிரவு 2 மணிக்கு அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு இணையான தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.