நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது.

இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools