X

நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் புகார்!

கேரள நாட்டிலும் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவருக்கு ஜோடியாக பட்டதாரி படத்தில் அதிதி மேனன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில், நடிகை அதிதி மேனன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, நானும், அபி சரவணனும் ‘பட்டதாரி’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். இருவருக்கும் காதல் உண்டானது, அபி சரவணனின் செயல்பாடுகள் சரி இல்லாததால் அவரை விட்டு சில மாதங்களில் பிரிந்தேன்.

தற்போது தன்னை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து தன் மீது பொய் புகார்களை அபிசரவணன் பரப்பி வருகிறார். நான் அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக போலியான ஆவணங்களை தயாரித்து மிரட்டி வருகிறார்.

அபி சரவணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்’ என்றார்.