நடிகர் அபிஷேக் பச்சனுக்கு அறுவை சிகிச்சை!

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறிய விபத்தில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அபிஷேக் பச்சனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

தற்போது அபிஷேக் பச்சனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவர்கள் சில வாரங்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என அவரை அறிவுறுத்தி இருப்பதால், படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools