நடிகர் அசோக் செல்வன் வெளியிட்ட ‘ப்ளூ ஸ்டார்’ இசை சேர்ப்பு வீடியோ வைரல் ஆகிறது
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புளூ ஸ்டார்’ (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘புளூ ஸ்டார்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சி ஒன்றின் உருவாக்கத்தை நடிகர் அசோக் செல்வன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “நம்ம ஊரு இசை.. ஏதோ ஒன்னு பண்ணுது! ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.