X

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

தமிழில் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வருகிற மார்ச் மாதம் அக்ஷய்குமார் சில நடிகைகளுடன் வட அமெரிக்கா சென்று கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதனை விளம்பரப்படுத்த உலக உருண்டையின் இந்திய வரைபடத்தில் செருப்பு காலுடன் நிற்பதுபோன்று புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

அதில் கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் வட அமெரிக்க ரசிகர்களை 100 சதவீதம் சந்தோஷப்படுத்த இருக்கிறோம், தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படத்துக்கு வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

“இப்படி காலில் செருப்பு போட்டுக்கொண்டு இந்திய வரைபடம் மீது நிற்பது நியாயமா? நமது நாட்டை கவுரப்படுத்துங்கள். அவமதிக்க வேண்டாம். நீங்கள் செய்த வேலைக்கு இந்தியர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கண்டித்து உள்ளனர். இது வலைத்தளத்தில் பரப்பரப்பாகி உள்ளது.