நடிகர்கள் சூர்யா, கார்த்தி எடுத்த அதிரடி முடிவு – பிரியும் ரசிகர் மன்றங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரின் ரசிகர் மன்றங்கள் ஒன்றாகவே இயங்கி வந்தன. இருவரும் தனித்தனியே பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தும் பல
முன்னெடுப்புகளையும் செய்து வந்தனர். சூர்யா அகரம் என்ற பவுண்டேஷனையும், கார்த்தி உழவன் என்ற அறக்கட்டளையையும் தனித்தனியாக ஆரம்பித்து நடத்துவது போல, இருவரும் தற்போது
ரசிகர் மன்றங்களையும் பிரித்துள்ளனர். இவர்களின் சொந்த நிறுவனங்களிலேயே இருவரும் அதிக படங்களில் நடித்து வருவதால், அவர்களின் வியாபாரத்தை பெருக்கவும் இதன் மூலம் அவர்கள்
திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து
வருகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools