லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கை கமல் பரிசளித்தார். ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்திருந்தார்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியை அவருடைய இல்லத்தில் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் படக்குழு சந்தித்துள்ளனர். அப்பொழுது இவர்களுடன் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான் கான் உடன் இருந்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இதனுடன், சந்திப்பில் எடுத்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, முழுமையான மகிழ்ச்சி, எனது அன்பான பழைய நண்பரான கமல்ஹாசனை விக்ரம் பட வெற்றிக்காக என் அன்பான சல்மான்கானுடன் கொண்டாடி கௌரவிக்கிறேன்.
நேற்றிரவு எனது வீட்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்ரம் படக்குழு. என்ன ஒரு தீவிரமான மற்றும் த்ரில்லான படம் இது!! பாராட்டுக்கள் நண்பரே!! என்று பதிவிட்டுள்ளார்.