X

நடிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

அருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்’, `கே 13′ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13′ படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் பரத் கூறுகையில், “ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் அதற்கு நேர்மாறாக, இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்தார். படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.