நடன இயக்குநர்கள் சங்க தேர்தல் – நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார்

சினிமா தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடந்தது. சென்னை தியாகராயநகரில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியும், தேர்தல் அதிகாரியுமான பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

தலைவர், செயலாளர், பொருளாளர், இரண்டு துணை தலைவர்கள், இரண்டு இணை செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் ஷோபி பவுல்ராஜ் மற்றும் தினேஷ் போட்டியிட்டனர்.

துணை தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் லலிதா ஷோபி மற்றும் சுஜாதா போட்டியிட்டனர். நடிகர்கள் கமல்ஹாசன், சீமான் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் வாக்களித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools